நாகப்பட்டினம் வருவாய் மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் மயிலாடுதுறையில் நடைபெற்றன. வட்டாரம் மற்றும் கல்வி மாவட்டப் போட்டிகளில் வெற்றி பெற்ற பொறையாரைச் சேர்ந்த சர்மிளா காடஸ் எஸ்.எம்.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் தடகள வீரர்கள் இப்போட்டியில் கலந்து கொண்டனர். திலோத்தமி சித்ரா என்ற 9 ம் வகுப்பு மாணவி 100 மீட்டர் ஓட்டத்தில் முதலிடம், நீளம் தாண்டுதலில் இரண்டாமிடம், 9 ம் வகுப்பு அரசன் உயரம் தாண்டுதலில் முதலிடம், 12 ம் வகுப்பு கலைச்செல்வன் உயரம் தாண்டுதல், 800 மீட்டர் ஓட்டம், இவற்றில் இரண்டாமிடம் பெற்றனர். இவர்கள் அனைவரும் திருச்சியில் நடைபெறவிருக்கும் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

இதே போட்டியில் கலைசெல்வன் 400 மீட்டர் ஓட்டத்தில் மூன்றாமிடம், அல்அஸ்பர் உயரம் தாண்டுதலில் மூன்றாமிடம், நிகேஷ், மணிகண்டன், சந்தோஷ், அரசன் ஆகியோர் 100 மீட்டர் தொடர் ஓட்டத்தில் மூன்றாமிடம் பெற்றனர். வெற்றி பெற்ற தடகள வீரர்களையும், மாநிலப் போட்டிக்கு செல்லும் முதல் இரண்டு இடங்களை கைப்பற்றியவர்களையும் பள்ளி முதல்வர் பாண்டியராஜன், மற்றும் பள்ளி ஆசிரிய ஆசிரியைகள் பெற்றோர் பாராட்டினர்.