தமிழ்நாடு அறிவியல் கழகம் வட்டார அளவில் துவங்கி மாநில அளவில் துளிர், ஜந்தர் மந்தர் என முறையே தமிழிலும், ஆங்கிலத்திலும் அறிவியல் வினாடி வினா நடத்தியது. சென்னை மாமல்லபுரம் தனலெட்சுமி சீனிவாசன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற போட்டியில் தமிழகத்தின் எட்டு மண்டலங்களிலிருந்தும் முதல் மூன்று இடங்களை வென்ற பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். மேலோர் பிரிவில் கலந்து கொண்ட பொறையார் சர்மிளா காடஸ் எஸ்.எம்.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் அணியினர் 10ம் வகுப்பு மாணவி புகழ், 9ம் வகுப்பு மாணவர்கள் குகராஜ் மற்றும் செல்வகாந்தன் ஆகியோர் இரண்டாமிடம் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்களையும், சான்றிதழ்களையும் கல்பாக்கம் அனுமின் நிலைய இயக்குநரும், விஞ்ஞானியுமான முனைவர் அனந்த சிவன் வழங்கினார். அறிவியல் விஞ்ஞானி ராஜன் பாபு சிறந்த அணிக்கான கேடயத்தை வழங்கினார். மாமல்லபுரம் தனலெட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் வி.சேகர் அறிவியல் இயக்கத்தின் பல்வேறு அறிவியல் நூல்களை வெளியிட்டு வெற்றி பெற்ற மாணவர்களின் வழிகாட்டி ஆசிரியர்களுக்கு பரிசாக வழங்கினார். மாநிலத்தின் இரண்டாமிடம் பிடித்த மாணவ மாணவிகளையும் வழிகாட்டி ஆசிரியை லஷ்மி பிரபாவையும் பள்ளி முதல்வர் பாண்டியராஜன் அடல் டிங்கரிங் பரிசோதனைக் கூடத்தின் பொறுப்பாளர் லூயிஸ் மேரி மற்றும் நாகை மாவட்ட அறிவியல் கழகத்தின் செயலாளர் சந்தோஷ் காட்சன் ஆகியோர் வாழ்த்தினர்.
படம் : கல்பாக்கம் அறிவியல் விஞ்ஞானி அனந்த சிவன் மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்குகிறார்.