நாகப்பட்டினம் வருவாய் மாவட்ட அளவில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த போட்டிகள் கடந்த வாரங்களில் நடத்தப்பட்டன. அனைத்திலும் பொறையாரைச் சேர்ந்த சர்மிளா காடஸ் எஸ்.எம்.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். தமிழக காடுகள் மற்றும் வன விலங்குகள் துறை நடத்திய ஆங்கிலப் பேச்சுப் போட்டியில் 10 ம் வகுப்பு மாணவி ஜெயஸ்ரீ இரண்டாம் பரிசு பெற்றார். அவருக்கு மாவட்ட ஆட்சியர் பரிசு வழங்கினார். நாகை மாவட்ட சிறுசேமிப்புத் துறை நடத்திய போட்டிகளில் குழு நாடகப் போட்டியில் ஆர்த்தி, அபிநயா, யஷ்வந்தினி, ஐயப்பன், விஷால், கிரண்ராஜ், கஜேஸ்வரன் ஆகியோர் இரண்டாமிடமும், குழு நடனப்போட்டியில் சுஷ்மிதா, அகல்யா, ஹர்ஷிதா, ஐஸ்வர்யா, சுவேதா ஆகியோர் மூன்றாமிடமும் பெற்றனர். அவர்களுக்கானப் பரிசுகளை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதன்மை கல்வி அலுவலர் திரு க. குணசேகரன்; வழங்கினார்.

பள்ளிக் கல்வித்துறையின் அறிவியல் கண்காட்சி புனித அந்தோணியார் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. அக்கண்காட்சியில் நாகை மாவட்டத்தின்; இரண்டாமிடத்தை ஐயப்பன் என்ற மாணவர் கைப்பற்றியுள்ளார். அவருக்கான சான்றிதழையும், பரிசையும் முதன்மை கல்வி அலுவலர் அவர்கள் புனித அந்தோணியார் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் வழங்கினார்.

துளிர் அறிவியல் இயக்கம் நடத்திய ஜந்தர் மந்தர் ஆங்கில வினாடி வினாப் போட்டியில் சீனியர் பிரிவின்; புகழ், குகராஜ், செல்வகாந்தன் ஆகியோர் முதலிடத்தையும், சூப்பர் சீனியர்; பிரிவின் சஹானா, பெட்ரிக் சாம் தாமஸ், ஐஸ்வர்யா அணியும், ஜூனியர் பிரிவின் தீபிகாஸ்ரீ, சுபஸ்ரீ, ரஞ்சனி அணியும் மூன்றாமிடத்தை பெற்று தவசுமுத்து நாடார் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவில் மையத்தின் தலைமையாசிரியர் அவர்களிடமிருந்து கேடயங்களையும், சான்றிதழ்களையும் பெற்றனர்.

மேலும் கல்வி மாவட்ட அளவில் முதற்சுற்றும், மாவட்ட அளவில் இரண்டாம் சுற்றும் வென்று பரிசுகள் பெற்ற மேற்படி மாணவ மாணவிகளை குழந்தைகள் தின விழாவில் பரிசுகள் வழங்கி பள்ளி முதல்வர் பாண்டியராஜன் மற்றும் ஆசிரிய ஆசிரியைகள் பாராட்டினர்.


ஜெயஸ்ரீ காடுகள் ரூ வன விலங்குகள் துறை போட்டிக்கான பரிசை மாவட்ட ஆட்சியரிடம் பெறுகிறார்.