தமிழ் மாநிலப் போட்டியில் பொறையார் பள்ளி மாணவி வெற்றி.

தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை ஆண்டுதோறும் பல்வேறு தமிழ் போட்டிகளை மாவட்ட, மாநில அளவில் நடத்தி ரொக்கப்பரிசுகள் வழங்கி வருகிறது. கடந்த ஆகஸ்ட் 22 அன்று மாநில அளவில் மேடைப்பேச்சு, கவிதை, கட்டுரை எழுதுதல் ஆகியவற்றில் இறுதிச் சுற்று போட்டிகள் மதுரை உலகத் தமிழ் சங்கத்தில் நடத்தப்பட்டன. நாகை மாவட்ட அளவில் கட்டுரைப்போட்டிகளில் முதல் பரிசு பெற்ற பொறையார் பள்ளி மாணவி இறுதிச் சுற்றுக்கு அனுப்பப்ட்டார். சர்மிளா காடஸ் மேல்நிலைப்பள்ளியிலிருந்து சென்ற பிரீத்தி என்கிற அம்மாணவி…

Read More

நாகை மாவட்டப் போட்டிகளில் பொறையார் பள்ளிக்கு பரிசுகள்.

நாகப்பட்டினம் வருவாய் மாவட்ட அளவில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த போட்டிகள் கடந்த வாரங்களில் நடத்தப்பட்டன. அனைத்திலும் பொறையாரைச் சேர்ந்த சர்மிளா காடஸ் எஸ்.எம்.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். தமிழக காடுகள் மற்றும் வன விலங்குகள் துறை நடத்திய ஆங்கிலப் பேச்சுப் போட்டியில் 10 ம் வகுப்பு மாணவி ஜெயஸ்ரீ இரண்டாம் பரிசு பெற்றார். அவருக்கு மாவட்ட ஆட்சியர் பரிசு வழங்கினார். நாகை மாவட்ட சிறுசேமிப்புத் துறை நடத்திய போட்டிகளில் குழு நாடகப் போட்டியில்…

Read More

பொறையார் பள்ளியில் ஓரிகாமி பூக்கள் பூத்தன

நாகை மாவட்டம் பொறையாரில் உள்ள சர்மிளா காடஸ் எஸ்.எம்.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் காகிதங்களைக் கொண்டு பல்வேறு பூக்களும், அலங்காரப் பொருட்களும் செய்யும் போட்டி நடந்தது. ஒரிகாமி என்றழைக்கப்படும் காகிதப் பூ போட்டியில் சுமார் 400 மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தொங்கும் பூக்கள், மேஜை பூக்கள், சுவர் பூக்கள், பூங்கொத்துகள், பரிசுப்பெட்டகங்கள் என்ற பல்வேறு தலைப்புகளில் அலங்காரப் பொருட்களை செய்தனர். வகுப்புவாரியாக முதல் மூன்று சிறந்த படைப்புகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவர்களின் வண்ணமிகு படைப்புகள் இரு தினங்கள் கண்காட்சிக்கு…

Read More

புத்தாக்க அறிவியல் கண் காட்சியில் சர்மிளா காடஸ் பள்ளி இரண்டாமிடம்

தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில் நுட்பத் துறையானது அறிவியல் புத்தாக்க விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் அறிவியல் கண்டு பிடிப்புகளுக்கான கண்காட்சியை மாவட்ட அளவில் நடத்தியது. அதில் மேற்படி துறையின் பத்தாயிரம் ரூபாய் புத்தாக்கப் பரிசு பெற்றிருந்த நாகை மாவட்ட பள்ளி மாணவி மாணவியர் கலந்து கொண்டனர். பொறையார் சர்மிளா காடஸ் எஸ்.எம்.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் ஒன்பதாம் வகுப்பு மாணவி கெசியா பியட்ரிஸ் தன்னுடைய கண்டுபிடிப்பான தானியங்கி குப்பை பிரிக்கும் இயந்திரத்தை காட்சிபடுத்தினார். அக்கருவி குப்பைகளை கொட்டும் பொழுதே…

Read More

பொறையார் பள்ளி மாநிலத்தில் இரண்டாமிடம்

தமிழ்நாடு அறிவியல் கழகம் வட்டார அளவில் துவங்கி மாநில அளவில் துளிர், ஜந்தர் மந்தர் என முறையே தமிழிலும், ஆங்கிலத்திலும் அறிவியல் வினாடி வினா நடத்தியது. சென்னை மாமல்லபுரம் தனலெட்சுமி சீனிவாசன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற போட்டியில் தமிழகத்தின் எட்டு மண்டலங்களிலிருந்தும் முதல் மூன்று இடங்களை வென்ற பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். மேலோர் பிரிவில் கலந்து கொண்ட பொறையார் சர்மிளா காடஸ் எஸ்.எம்.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் அணியினர் 10ம் வகுப்பு மாணவி புகழ்,…

Read More

மண்டல அறிவியல் வினாடி வினாவில் பொறையார் பள்ளி முதலிடம்.

தமிழ்நாடு அறிவியல் கழகம் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் முறையே துளிர் மற்றும் ஜந்தர் மந்தர் என்கிற அறிவியல் வினாடி வினாவை மாநில அளவில் நடத்தி வருகின்றது. பள்ளிகளுக்கிடையே வட்ட அளவில் துவங்கி மாவட்ட, மண்டல, மாநில அளவில் நடத்தி வருகிறது. மண்டல அளவிலான வினாடி வினா கடந்த சனிக்கிழமை திருச்சி காவேரி மகளிர் கல்லூரியில் நடைபெற்றது. திருச்சி மண்டலத்தில் உள்ள அனைத்து மாவட்டத்திலிருந்தும் முதலிடம் பிடித்த மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர். நாகப்பட்டினம் மாவட்டம் பொறையாரிலுள்ள சர்மிளா காடஸ்…

Read More

மாவட்ட சாரணியப் போட்டிகளில் பொறையார் பள்ளி முதலிடம்

சீர்காழி கல்வி மாவட்ட அளவிலான சாரண சாரணியர் படைகள், குருளையர் மற்றும் நீலப்பறவையர் படைகள் ஆகியோருக்கான ஆண்டு முகாம் சீர்காழி பெஸ்ட் மெட்ரிக்.பள்ளி வளாகத்தில் ஜனவரி 9, 10 ஆகிய இரு தினங்கள் நடைபெற்றன. 24 பள்ளியிலிருந்து சுமார் 400 சாரண சாரணியர் சீருடையுடன் கலந்து கொண்டனர். சாரண விதிகள், முதலுதவி, சாரணர் முடிச்சு, பொது அறிவு, உற்று நோக்குதல், நுகர்வு திறன், பண்பாட்டு நடனங்கள், தேசப்பற்று பாடல்கள், கூடாரம் அமைத்தல், அணி வகுப்பு ஆகியப் போட்டிகள்…

Read More

மாநில விளையாட்டுப் போட்டிகளுக்கு செல்லும் தடகள வீரர்கள்

நாகப்பட்டினம் வருவாய் மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் மயிலாடுதுறையில் நடைபெற்றன. வட்டாரம் மற்றும் கல்வி மாவட்டப் போட்டிகளில் வெற்றி பெற்ற பொறையாரைச் சேர்ந்த சர்மிளா காடஸ் எஸ்.எம்.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் தடகள வீரர்கள் இப்போட்டியில் கலந்து கொண்டனர். திலோத்தமி சித்ரா என்ற 9 ம் வகுப்பு மாணவி 100 மீட்டர் ஓட்டத்தில் முதலிடம், நீளம் தாண்டுதலில் இரண்டாமிடம், 9 ம் வகுப்பு அரசன் உயரம் தாண்டுதலில் முதலிடம், 12 ம் வகுப்பு கலைச்செல்வன் உயரம் தாண்டுதல், 800 மீட்டர்…

Read More